நட்பின் மரணம் …

பகிர்ந்து கொண்ட உணவுகள்,

மாற்றிக்கொண்ட உடைகள்,

உனக்காக நன் போட்ட சண்டைகள்,

எனக்காக நீ வாங்கிய அடிகள்,

நமக்குள் மட்டுமே பகிர்ந்துகொண்ட ரகசியங்கள்,

சின்ன சின்ன சண்டைகள்,கோபங்கள்,

புன்சிரிப்புகள் …

நீண்ட  இடைவெளிக்குப்பின் நாம் சந்தித்த போது

ஒருவரை ஒருவர் அடையாளம் காணத் தவறிய

அந்த ஒரு சில நொடிகளில்…

அனைத்து நிகழ்வுகளும் ,

வெறும் நினைவுகளாய்ப் போயின.

Image

அப்பாவின் வீடு

விடியலை வரவேற்க காத்திருக்க பிடிக்காமல் , சேவல்கள் கமலாவின் ஊரில்

சீக்கிரமே கூவிதீற்பது  வழக்கமாகிவிட்டது.

இன்றும் அப்படிதான், மணி மூன்றரை தான் அதற்குள் கமலாவை எழுப்பிவிட்டன சேவல்கள்.

இதுவும் ஒருவகையில் கமலாவிற்கு ஏதுவானதாகவே இருந்தது.

இப்படி சீக்கிரமே எழுந்தால்தான் வேலைகள் ஓடும் , அதுவும் இந்த புது வீட்டிற்கு வந்து இன்னும் எதுவும் பழக்கப் படவில்லை.

பழையவீடு  பெரியது, அப்பாவின் பூர்விக சொத்து , அதில் சித்தப்பா குடும்பத்துடன் இவளின் குடும்பமும்   சேர்த்து மொத்தம் 9  பேர். சித்தப்பா,சித்தி, அவர்களின் ஒரு பிள்ளை,ஒரு பெண் குழந்தை, இவளது வீட்டில், அப்பா, அம்மா,இவள்,தம்பி மற்றும் ஒரு தங்கை

இவ்வளவு பேர் இருந்தும் வீடு பெரிதாகவே தோன்றும்,

இவர்களது தெருவில் மொத்தம் 5 வீடுகள் அனைத்துமே பெரிய வீடுகள்தான்.

வாசலில் தோட்டம் தாண்டித்தான் வீட்டிற்குள் நுழைய முடியும், தோட்டத்தில் கமலாவும், சித்தப்பாவும் சேர்ந்து பல செடிகளை நட்டிருன்தனர். ரோஜா, சிகப்பு,வெளிர் மஞ்சள் என பூத்து குலுங்கும் , செம்பருத்தி ,பவழமல்லி,முல்லை,  என பல செடிகொடிகள் நிரைந்து வீட்டிற்கு மேலும் அழகூட்டின.

தாத்தா பர்மாவில் வியாபாரத்தில் கொழித்தபோது கட்டிய வீடு, நுழைவு வாயில் கதவு பர்மா தேக்கினால் ஆனது இரண்டும் மிகவும் பெரியவை, ஒரு ஆளால் திறக்க முடியாது

கதவு தாண்டி பெரிய வெரண்டா, அதை அடுத்து முற்றம்  சுற்றி மரத் தூண்களாலான பத்தி , அதை ஒட்டி 5 அறைகள், அடுத்து 2அம் முற்றம் , அதை சுற்றியும் முதலாவது போலவே அறைகள், அதை அடுத்த பின்கட்டில் தான் சமையர் கட்டு, அதை தாண்டி கிணற்றடியும் ,குளியலறையும் , வீட்டை சுற்றி தென்னை  , மற்றும் மாமரங்கள்.

அறைகளில், அயல்நாட்டு டைல்ஸ்கள் பாதிக்கப்பட்டிருக்கும், ரவிவர்மா ஓவியங்கள் வீடெங்கிலும் தொங்கவிடப் பட்டிருக்கும்.

அப்பாவும் , சித்தப்பாவும் அந்த பெரிய வீட்டில் தான் பிறந்து, வளர்ந்ததெல்லாம். இருவரும் திருமணம் முடித்து குழந்தைகளை வளர்த்ததும் அதே வீட்டில் தான்.

இள  வயதிலேயே பெற்றோரை இழந்தவர்கள் அப்பாவும், சித்தப்பாவும். இருவருக்கும் பெரிய வயது வித்யாசமும் கிடையாது, அனாலும் அப்பாதான் வீட்டு பொறுப்புகளை நிர்வகித்தார்,

அனைத்தையும் சரி செய்வார், குடும்பத்தில் ஏற்படும் சிறு, சிறு சண்டைகள் பெரிதாகிவிடாமல் பார்த்து கொள்வார்.

குழந்தைகளில் வித்தியாசமே இவளது வீட்டில் இல்லை. கமலா தான் வீட்டின் மூத்த பெண், இவளுக்கு பின்  சித்தப்பாவின் பிள்ளை கணேஷ் ,  அவர்களுக்கு அடுத்து இவளது தம்பி சுந்தர் சித்தியின் கடைக்குட்டி வாணியும் இவளது தங்கை சீதாவும் ஒரே வயது.

கமலாவின் அப்பா ஒரு பலசரக்கு கடை வைத்து நடத்தி வந்தார். சித்தப்பா பள்ளி ஆசிரியர் . ஆக இருவருக்கும் வருமானத்திற்கு ஒரு குறைவும் இல்லை.

சித்திக்கும், அம்மாவிற்கும் வீட்டு வேலைகளே சரியாய் இருக்கும். சமையலுக்கு தனி ஆள் உண்டு. மேல்வேலைக்கு தனி .

கமலா சிறு குழந்தையாய் இருந்தபோது , வீட்டில் மாடுகளும், 2 மாட்டுவண்டிகளும்  கூட இருந்தன .

அது எல்லாம் பழைய கதை, இப்பொழுது எல்லாமே கலைந்த கனவாய் போனது.

எல்லாமே சட்டென முடிந்து விட்டதாய் கமலாவிற்கு  தோன்றின.

சித்தப்பா பிள்ளை கணேஷ் திடீரென கல்லூரியில் படிக்கப்போன இடத்தில் ஷெர்லின் என்ற பெண்ணை காதலித்து வீடிற்கு சொல்லாமல் கலியாணமும் பண்ணிவிட்டான்,

முதலில் கோபத்தில் கொந்தளித்த சித்தப்பாவை அப்பாதான் சாமாதானம் செய்தார் , மதுரைக்கு போய்  கணேஷை வீடிற்கு கூடி வந்தார் , சித்தியும் அம்மாவும் அழுது புலம்பினார்கள், எல்லாவற்றையும் அப்பா சரி செய்தார். கணேஷை மதுரையிலேயே தனி குடித்தனம் வைத்தார். ஷேர்லினை இதுவரை யாரும் பார்த்ததே இல்லை அப்பாவை தவிர. சித்தப்பா இனி தனக்கும் தன் மூத்த பிள்ளைக்குமான உறவை முற்றிலுமாக முறித்து விட்டிருந்தார் . அப்பா மட்டும் அவ்வப்போது கணேஷை சென்று பார்த்து வருவார், செலவுக்கு பணமும் கொடுப்பார்.

ஆனால் யாரும் எதிர் பார்க்காதது சித்தியின்  மாற்றம் தான் .

கணேஷ் வீட்டைவிட்டு சென்றபின் சித்தி மனதளவில் நொறுங்கிப்போனாள், அதை புரிந்து கொள்ள சித்தப்பாவும் முயலவே இல்லை.

சித்தியின் பிள்ளைப்பாசம், குமுரலாய்  மாறி, பகையாய், பொறாமையாய்  அம்மா, கமலா என ஆனவர் மீதும் திரும்பியது,

பின் சித்தப்பாவிடம் அடிக்கடி சண்டையிட ஆரம்பித்தாள் சித்தி.

‘ அவரு பெத்த பிள்ளையா  இருந்தா அப்பிடி தான் வேற ஊர்ல தனி குடித்தனம் வைப்பாங்களா? எம்புள்ள வேற சாதி பொண்ண இளுதாந்தா ரெண்டு சாத்து சாத்தி வெட்டி வுட்டு கூட்டி வருவாங்களா அத விட்டு  அவனை குடம்பதுல  இருந்தும், உங்க கிட்டைருந்தும் பிரிசிட்டாறு  இலே உங்கண்ணன், எல்லாம் சொத்து ஆசை தான் காரணம் … ‘

சித்தப்பா சித்தியை அறைந்தது அன்றுதான் . கமலாவும் , தம்பி அனைவரும் ஓடி வந்து சித்தியை  சாமாதானம் செய்தனர்.

அப்பா வீட்டில் இல்லை, வந்ததும் அம்மா ஒன்றுவிடாமல் நடந்ததை சொல்லிவிட்டாள்.

அடுத்தநாள் காலை அப்பா சித்தப்பாவிடம் மட்டுமல்லாமல் எல்லோருக்கும் பொதுவாகவே பேசினார்

‘ இதோ பாரு தம்பி எனக்கு உம்புள்ள எம்புள்ளன்னு  ஒரு வித்தியாசமும் இல்லே , கணேஷ் பண்ணது  தப்பு தான் , அனா அவனை ஒதுக்கி வக்கணும்லாம்  நான் யோசிக்கல, அவ வேற சாதி பழகம்லாம் வேறதா இருக்கு, அதான் கொஞ்ச நாள் தனி குடித்தனமா இருக்கட்டுமேனு நினச்சேன், நீயும் ரொம்ப கோவமா இருந்தே, சொத்து சொகம் முக்கியம்னு நான் நினைச்சதே இல்ல’

சொல்லிவிட்டு சிறிது நேரம் எதையோ யோசித்தார் அப்பா,

சித்தப்பா இதற்குள் மனைவியை முறைத்தபடி எதையோ சொல்ல வாய்திறந்தார் , அவரை  தடுக்கும்விதமாக அப்பாவே தொடர்ந்தார்

‘ இனி எப்போ உன் வீடு என்வீடுனு பேச்சு வந்திடிச்சோ  இனி ஒரே வீட்ல இருந்து பயனில்லே, அதுனால நான் தனியா போயிரலானு முடிவெடுதிட்டேன்.”

சித்தப்பாவின் ஆட்சேபகங்களை பொருட்படுத்தாது பேசினார் அப்பா

‘ தம்பி இதுல ஒண்ணும் தப்பு இல்லே, உறவை முறிசிட்டா போறேன் தனியா போறேன் அவ்ளோதான் , பிள்ளைகளும் வளர்ந்திட்டங்க , வீட்ல பொம்பிளைகளும் அவுங்க விருப்பபடி  வாழனும். அதுமட்டும் இல்லே வாழ்ந்தா எல்லோரும் சந்தோஷமா  வாழணும் , சண்டையடிசிட்டு ஒரே வீட்ல வாழறது சரிவராது.’

என முடிவாக சொல்லிவிட்டார்,

அப்பாவின் பேச்சிற்கு யாரும் எதிர்ப்பு கூற முடியாது.

சித்தப்பா எவ்ளவோ மன்றாடி பார்த்து தோற்றார்.

சித்தி அதோடு சுத்தமாக எங்களுடன் பேசுவதையே நிறுத்திவிட்டாள்.

காரியங்கள் கட கட வென நடந்து முடிந்தன , ஒருவாரத்துக்குள் அப்பா  பக்கத்துக்கு டவுனுக்கு கடையை மாற்றிவிட்டார், கடைக்கு அருகிலேயே வீடும்  பார்த்துவிட்டார், இந்த வீடு பழைய வீட்டுடன் மிகவும் சிறியது. எப்படி  அப்பாவால் அவளவு பெரிய வீட்டை விட்டு இங்கே  வரமுடிந்தது ? என்று பலமுறை  கமலா யோசிப்பாள்.எப்படியோ இங்கே வந்து இதோ நாட்கள் பரந்தாயிற்று.

சித்தப்பாவுக்கும்  அப்பாவுக்குமான   தொடர்பு   விட்டுப்போனது    , இரு குடும்பங்களும் பேசிக்கொள்வதே  இல்லை

அப்பாவும் தம்பி சுந்தரும் 8 மணிக்கெல்லாம் கடைக்கு சென்று விடுவார்கள் ,

பின் 9 மணிக்கு தங்கை பள்ளிக்கு சென்றுவிடும்,  அதற்குள் அம்மாவும், கமலாவும், சமையலை முடித்து வீட்டை சுத்தம் செய்து விடுவார்கள். கமலாவும் டவுனிலேயே  கல்லூரியில் சேர்ந்துவிட்டாள்.

ஏனோ அப்பா செலவு செய்வதில் மிகவும் கணக்காகவே இருந்தார், அதனால்தான் சிறிய வீடாக பார்த்திருந்தார்.

அப்பாவின் சிக்கனம் விரைவிலேயே  பலனளித்தது,

பின் எவ்ளவோ மாற்றங்கள் நிகழ்ந்து விட்டன, கடையை  அப்பா விரிவுபடுத்திவிட்டார் .  தம்பியும் படிப்பை முடித்து விட்டு  முழு ஈடுபாட்டோடு  அப்பாவுடன்   வியாபாரத்தில் அப்பாவுக்கு தோள்  கொடுத்தான், கமாலாவும்  படிப்பை முடித்து விட்டு அப்பாவின்  கடைக் கணக்குகளை பார்த்தாள், 3 வருடங்கள்  ஓடியதே  தெரியவில்லை!

அப்பா புது வீட்டையும் கட்டிவிட்டார் ,

திடீரென கணேஷ் ஒரு நாள் வீட்டிற்கு வந்த போதுதான் விவரமே அப்பாவுக்கு தெரிந்தது,

‘ பெரியப்பா, அப்பா வீட வித்துரணும்னு சொல்றாங்க அதான் உங்க கையெழுத்து வேணும்….’

கணேஷ் பேசிமுடிப்பதற்குள் அப்பா எழுந்தார்

அம்மாவும் தம்பியும், கமலாவும் அவரை வைத்தகண் வாங்காமல் கவனித்தனர்.

‘ நீ சின்ன புள்ள உனக்கு ஒண்ணும் தெரியாது, உங்க அப்பா வா என் கைஎழுத்த கேட்டான்?’

அப்பாவின் குரல் சற்றே  கோபமாக  தொனித்தது

கணேஷ் தலையை  குனிந்துகொண்டான் ,

‘ பெரியப்பா, அப்பாவா இல்ல , அம்மா சொல்லி தான் …’

அப்பா ஒன்றும் சொல்லாமல் மௌனமானார்  .

பின்பு பேசுவதற்கு ஒன்றும் இல்லை என்பது போல, அப்பா கடைக்கு கிளம்பிவிட்டார்.

கணேஷும் போய்விட்டான்.

2 வாரங்களுக்கு பின் கணேஷுடன் சித்தப்பாவும் சித்தியும் வீட்டிற்கு வந்திருந்தனர்,  கமலா அப்பாவை கடையிலிருந்து வரச்சொல்லி போன் செய்தாள்.

அப்பா வரும் வரை யாரும் ஒன்றும் பேசவில்லை … அசௌகரியமான மௌனம நீண்டது  , ஆனால் சித்தப்பாவின் கைகளில் இருந்த பத்திரக் காகிதங்கள் எல்லாவற்றையும் பேசின. அப்பா வேகமாக வந்தார்,

சித்தப்பா தலை கவிழ்ந்தவாறே

‘ வீட்ட வித்துரலாம்முன்னு  இருக்கோம் அதான் உங்க கையெழுத்து வேணும் ‘

என்றார்

அதுவரை அவ்வளவு கோபமான அப்பாவை கமலா பார்த்ததே இல்லை , கம்பீரமான குரலில்

‘ யாரை கேட்டு வீட்டை விக்கிறத பத்தி முடிவு எடுத்தே?’

சித்தப்பா தயங்கியவாறே , ‘

‘இபோ நாங்க அந்த வீட்டை வித்துட்டு கணேஷோடவே போய்டலாம்னு முடிவு பண்ணிட்டோம்,  எங்களுக்கு  தான் போதாத காலம், உடம்பு முடியமே நான் வேலைய விட்டுட்டேன் , கணேஷுக்கும் வேலை ஒண்ணும்  சரிபடலை, அதான் அவன் வியாபாரம் செயலாம்னு  முதல் கேட்டான், அவனுக்கும் அந்த பொண்ணுக்கும் வேற வழி இல்லே ‘

அப்பா தீர்கமாக

‘ அதெல்லாம் அந்த வீட்டை விற்க முடியாது , நான் கையெழுத்து போடமாட்டேன்’

சித்தப்பா பேச வாய்திரக்குமுன்   சித்தி முந்திக்கொண்டு

” அதான் சொத்து ஆசை எல்லாம் ஒண்ணும் இலைன்னு அன்னிக்கு  சொல்லிடீங்க இல்லே, இபோ இப்பிடி பேசுறீங்க, நல்ல வசதியான வீடு, இவ்ளோ கடைகள்னு சொத்து சுகத்தோட தானே இருக்கீங்க ? ”

அப்பா நிதானமாக சித்தப்பாவை நோக்கி,

‘எனக்கு சொத்து , பணம்  முகியமில்லே , உண்மைதான், இனிக்கு நான் நல்லா  சம்பாதிச்சு வளமா இருக்கேன், அதுக்கு காரணம் என் உழைப்பு, யாரையும் நம்பி நான் இல்லே, அன்னிக்கு நான் நம்ப வீட்டை விட்டு வந்ததுக்கு காரணம் , உறவுகள் விட்டுப்போககூடதேன்னு தான் , எனக்கு சொத்து மேல அசை இல்லைனா எனக்கு அந்த வீட்டுல உரிமை இல்லேன்னு அர்த்தமா?  அந்த வீடு வெறும் கட்டடம் இல்லே , நம்ப அப்பா, அம்மா , குடும்பம்னு  பல உறவுகளின் நினைப்புகள் அதுல புதைஞ்சு இருக்கு .

அன்னிக்கு நான் என் குடும்பத்தோட நம்ப வீட்டை விட்டுட்டு வந்தப்ப, உனக்கு என் உறவு வேணுன்னு தோணல, நான் தான் முட்டாள்தனமா பாசம், பந்தம்னு ஏமாந்திட்டேன் ,

உனக்கு வெறும் காசு  தான் வேணும், எனக்கு வேற சிலதும் வேண்டி இருக்கு, அதை தேடிக்கிற திறனும் இருக்கு,

ஒண்ணு  பண்ணு வேணுனா உன் பங்கு வீட்ட எனக்கு வித்துட்டு போய்டு சரியா?

அடுத்தவன் சொத்து சுகம் எனக்கு வேணாம், அனா என்னோட உரிமையை விட்டுக்குடுத்து    ஏமாளியா நிக்க மாட்டேன் , புரிஞ்சிக்க’

 

கணேஷ் அவனது அம்மா அப்பாவுடன் மொனமாக வெளியேறினான்.

அம்மாவும், கமலாவும் அப்பாவை பெருமையாக பார்த்தார்கள்.

– (c) abirami.k