செய்தியே சுவாசமாய்

செய்தியே சுவாசமாய் – செய்தியாளர்கள் பற்றிய புத்தகம்

செய்தியே சுவாசமாய் – செய்தியாளர்கள் பற்றிய புத்தகம்- k.abirami

புத்கத்தில் இருந்து ஒரு துளி…

புகைப்படம் எடுக்க நான் மிகவும் கஷ்ட்டப்படும் நேரம், கலவரம் முடிந்த பின் நிலவும் நேரந்தான். நான் மிகவும் மனக் கட்டுப்பாடோடுதான் இருக்கிறேன். மனதளவில் பாதிக்கப்படாமல் இருக்க முயற்சிக்கிறேன். ஆனால் அது மிகக்கடினம்.நாங்கள் இங்கு காணும் காட்சிகள் அவ்வளவு கொடுமையானவை. ஒருமுறை கலவரதிற்குப்பின்

ஒரு பெண் கையில் ஒரு குழந்தையுடன் கதறிக் கொண்டிருந்தார். அக்குழந்தையின் தாய் தந்தை கலவரத்தில் கொலை செய்யப்பட்டிருந்தனர்.என்னிடம் அப்பெண் இவளை வைத்துக்கொண்டு நான் என்ன செய்வேன் ? எனக் கூறி அழுதாள்.

எனக்கு மிகவும் வேதனையாக இருந்தது.

என்னால் நிம்மதியாக உறங்க முடியாது , நான் ஓட வேண்டும், ஓடிக்கொண்டே இருக்க வேண்டும்,

குழந்தையை கண்ட அன்றுதான் மனம் தளர்ந்தேன்.

ஆனாலும் அப்பெண்ணையும் குழந்தையையும் படம் எடுக்க மறக்கவில்லை. இப்படி ஒரே ஒரு செய்திக்கே மனம் தளர்ந்தால் தொடர்ந்து பணிபுரிய முடியாது. இதுபோன்ற நூற்றுக்கணக்கான சம்பவங்கள் ,,,, அவை கொடுமையானவை. சகிக்க முடியாதவை, என்னால் என் உண்மையான பெயரைக்கூட வெளியிட முடியாது. வீடிற்கு செல்ல முடியாது.  – அல்கேறிய கலவரத்தில்அடிபட்ட ஒரு பத்திரிக்கையாளரின் பேட்டி.

Advertisements

Irony of Jammu’s legendary name…

every day we hear and read so many terror attacks in Jammu &kashmir,

recent sopore killings and riots…

and to the shooting of manzoor…

how long is this gonna go?

why aren’t we concerned? Have we gone numb to our fellow citizen’s suffering

is it bcos.. we are far away?

is it bcos we are  safe and @peace ?

is it bcos we have our own troubles?

The Wikipedia states….

According to legend, Jammu was founded by Raja Jamboolochan in the 14th century BC. During one of his hunting campaigns he reached the Tawi River where he saw a goat and a lion drinking water at the same place. The king was impressed and decided to set up a town after his name, Jamboo. With the passage of time, the name was corrupted and became “Jammu”.

At times i feel that India & Pakisthan  are just using Jammu – Kashimr as a political / communal scape goat…

In this issue we have to blame ourselves rather than politicians…

I feel India – the common people need to be aware of Kashmir’s pain.

Are our Media Commercializing Humaninty?

Are our Media Commercializing Humaninty?

Be it all….

  • Pune Bombing
  • Mumbai Blast
  • Hanging of Saddam …
  • Tsunami tragedy…
  • Nandigram violence…
  • Pakistan’s Emergency crisis…
  • U.S election…
  • Arushi murder case…
  • N-Deal and UPA govt vote of confidence…
  • September 11

For break fast, lunch and dinner…we watched it all with great anxiety and interest…
behind all this projection and hype lays a powerful hand of commercials by which the our news channels and the media as a whole survives.Are our Media Commercializing Humaninty?
The serious issue arises when this commercial hand gets more powerful and ultimately takes over credibility and ethics of journalism.
Journalists and Media personals do have a job to do and more than that they have a duty and commitment to society, thats what makes them who they are.Are our Media Commercializing Humaninty?
These basic ethics are being overlooked these days, due to the commercial motives of todays Media.
Thought not all, yet we do realize few media obviously commercialize any human interest news stories with out following any of their ethical or even legal guidelines.

They come to conclusions on an on going case,they give biased opinions,as a result they definitely provide a wrong picture about the whole issue, which is totally against any journalism.

No media must do anything to manipulate the public opinion for their personal interest.
Are our Media Commercializing Humaninty?

Such media considers humanity just as a added attraction and nothing more… they fail to realize human life,terror and tragedy is not salt and pepper to make the news soup tastier – and the viewer of the news is not an idiot to take it all in.

அப்பா

(தொடர்ச்சி )

நினைவுகள் பின் நோக்கிச் சென்றன – அப்போது எனது வயது 5

அப்பா அம்மாவிடம் பொரிந்து தள்ளிக் கொண்டிருந்தார் ‘ எல்லாம் நீ கொடுக்கிற செல்லம்தான் ..

பார் உன் பிள்ளைய , இப்போதான் பள்ளிக்கூடமே போக ஆரம்பிச்சிருக்கான் அதுக்குள்ளே புது பென்சில் பாக்ஸ் வேணுமாம் , இப்பவே இவ்வளோ பிடிவாதமா! ‘ என்றவாறே எனது காதைத் திருகினார் …

நான் அப்பாவின் கோபத்திற்கு அஞ்சாதவனாய் ‘ இல்லப்பா…அது ரொம்ப நல்ல பென்சில் பாக்ஸ் பா…என் பிரண்ட் வச்சிருக்கான் பா, திறந்தா சத்தம் வருதுப்பா…’

இப்போ உன்ன திருகுற திருகுல நீ தான் சத்தம் போடுவே ‘ என்றவாறே முறைத்த அப்பாவை அம்மா கஷ்ட்டப்பட்டு சமாதானப்படுத்தினார்.

அன்று இரவு தூக்கம் வராமல் புரண்டு கொண்டிருந்தேன் எனது மனது முழுக்க அந்த அழகிய பென்சில் பாக்ஸ் விஸ்வரூபமெடுத்தது … ‘ சே! எவ்ளோ நல்ல பாக்ஸ் அது…

வண்ண வண்ண படம் ஒட்டி , திறந்ததும் ஏதோ ஒரு இனிய பாட்டு …’ ஏன் இந்த அப்பா பென்சில் பாக்ஸ் வாங்கித் தரமாட்டேன்றாங்க?

எது கேட்டாலும் அப்பா கிட்ட இருந்து கிடைக்கிற ஒரே விஷயம் திட்டும், அடியும் தான்.

பென்சில் , பொம்மை, சைக்கிள் எதுக்கும் நான் ஆசைப் படக்கூடாது … மீறி கேட்டால்.. அப்பாவின் ருத்ர தாண்டவம் தொடங்கும் …

மத்த நண்பர்களோட அப்பாலாம் எவ்ளோ அன்பா இருக்காங்க …

என் அப்பாவும் தான் இருக்காரே …போலீஸ் என்றால் எப்போதும் சினிமா வில்லன் மாதிரி உர்ருன்னு  இருக்கனுமா என்ன?

எது கேட்டாலும் இது வேணாம்,அது வேணாம்னு…’

இந்த நினைவுகளுக்கிடையில் எப்போது தூங்கினேன் என்று எனக்கே தெரியவில்லை …

அன்று கனவிலும் அதே பென்சில் பாக்ஸ் … அழகாய் வண்ண வண்ணமாய் … திறந்ததும் இனிய பாட்டு …கேட்க்க ஆவலாய் திறக்கும் போது ‘டேய்! இன்னும் என்ன தூக்கம் எழுந்திரு…ஸ்கூல் போக வேணாமா ?’ கனவைக்கூட கெடுக்கும் திறமை அப்பாவுக்கே உண்டு. கடகடவென்று பள்ளிக்கு கிளம்பினேன்… அந்த வாரம் முழுதும் அப்பாவிடம் பென்சில் பாக்ஸ்காக போராடி தோற்றேன்.

அன்று ஞாயிற்று கிழமை , அப்பா அம்மாவுடன் ஒரு நண்பர் வீட்டு விருந்து.

நண்பரின் வீடு மிகவும் அழகு.. வாயிலில் பசுமைப் புரட்சி, அதில் பல மலர்கள், நண்பர் வந்து எங்களை உள்ளே அழைத்து சென்றார்…பெரியவர்கள் சோபாவில் புதைந்தனர்…ஏதேதோ பேசத்துடங்க … நான் வெறுமே அப்பா அருகில் அமர்ந்தேன்…

அப்போது என் வயது பையன் ஒருவன் வந்தான்… நண்பர்… என்னை நோக்கி ‘வினு..இது என் மகன் பிரதீப் ..போ போய் அவன் கூட விளையாடு … ‘என்றார்

பெரியவர்களை  விட்டு விடுதலையாகி பிரதீப்புடன் விளையாட ஓடினேன் …

பிரதீப் தன் அறைக்கு அழைத்துச் சென்றான் , ‘இருவரும் வோர்ட் கேம்ஸ்

விளையாடி ..பின் போர் அடிக்கவே …பிரதீப்.. என்னிடம் ‘ எங்க அப்பா புதுசா கார் பொம்மை வங்கிக் குடுத்தாங்க…வா அத காட்றேன், என்றபடி தனது அலமாரியில் உள்ள பொம்மைகளை தரையில் பரப்பினான்…

ஒரே ஒரு நொடி தான்.. அது என் கண்ணில் பட்டது… என் கனவில் வந்த அதே பென்சில் பாக்ஸ்… பிரதீப் அதை அலட்சியமாய் தூக்கி எரிய … பாக்சிலிருந்து மெலிய இசை!    நான் கண்கள் அகல …பென்சில் பாக்ஸில் மூழ்கினேன்,

என்னை கவனித்த பிரதீப்.. ‘என்ன வினு இந்த பென்சில் பாக்ஸ் போய் பாக்ரே.. இது பழசு..

வேணான்னு தூக்கி போட்டேன் … வேணுனா நீயே எடுத்துகோயேன்… ‘

ஆச்சர்யமாய் நான் ‘என்ன?’  கூவினேன், பிரதீப் நிதானமாய் ‘ எடுத்துக்கோ …நான் வேற புது பாக்ஸ் நிறைய வச்சிருக்கேன் …’

ஒன்றும் சொல்ல முடியாமல் நடப்பது நிசமா என்ற சந்தேகமாய்… ‘ரொம்ப தேங்க்ஸ் பா’ என்று கூறி பென்சில் பாக்சை நெஞ்சோடு அணைத்தேன். மனதிற்குள் சந்தோஷ குமிழ்கள்.

‘பசங்களா இங்க வாங்க வந்து ஸ்வீட் சாப்பிடுங்க …என்ற பிரதீப்பின் அம்மா

அழைக்க , நாங்கள் கிளம்பினோம்.

பெரியவர்களோடு எங்களுக்கும் இனிப்புகள் பரிமாறப்பட்டன..

இனிப்புகளின் சுவை உணரும் நிலையில் நான் இல்லை எனது கவனம் முழுவதும் பென்சில் பாக்ஸில்…

இந்த பாக்சை ஸ்கூலுக்கு எடுத்திட்டு போவேன், அந்த விக்னேஷ் காதுகிட்டே திறந்து காட்டணும்.

ஒரே ஒரு நாள் தான் ஸ்கூலுக்கு எடுத்திட்டு போவேன் அப்புறம் அதை பக்கத்துக்கு வீட்டு ரமா ஊருக்கு கிளம்பறப்ப குடுத்திட்டு போன பேனாவோட பத்திரமா வச்சிடுவேன். அப்பா திட்டினா மெதுவா பாக்சை திறந்து பார்பேன் …ஜாலி தான். சரிங்க நாங்க கிளம்பறோம் , நாளைக்கு வினுக்கு ஸ்கூல் ‘ அம்மாவின் குரல் என்னை நிகழ்காலத்திற்கு கொண்டு வந்தது.

அப்பா என்னை பார்த்து ‘ சரி விளயாடியாச்சா? வா கிளம்பலாம் உன் பிரெண்டுக்கு பை சொல்லு ‘ என்றதும் ‘பை பிரதீப்’ என்றேன். பிரதீப்பும் பதிலுக்கு கையசைத்தான். வெளி வாசலுக்கு வந்து அப்பாவின் நண்பர் வழியனுப்பிய போதுதான் என் கையை பார்த்த அப்பா கோபமாக ‘ என்ன இது, இந்த பாக்ஸ் ஏது? மத்தவங்க பொருளை இப்படிதான் சொல்லாம எடுப்பாங்களா? ‘

இதை எதிர்பார்க்காத நான் ஒன்றும் புரியாமல் பாக்சை கெட்டியாக பற்றியபடி ‘இல்லப்பா பிரதீப் தான் குடுத்தான்’ என்றேன் வாய் வரண்டது , ஒரு நிஜம் கனவாகிவிடுமோ என்ற பயம் தொற்றியது, பிடிவாதம் மூண்டது . அப்பாவுக்கு கோபம் அதிகமாகி விளைவு முதுகில் சுளீர் என்ற அடி ‘ வாய மூடு …’

அதற்குள் நண்பரும் பிரதீப்பும் குறுகிட…அப்பா, ‘ சாரி வினு மறந்துபோய் இந்த பாக்சை எடுத்திட்டு வந்துட்டான் .. நானும் கவனிக்கல ‘  நான் இறுக பற்றியிருந்த அந்த பாக்சை பிடுங்கி பிரதீப்பிடம் குடுத்தார். உடனே நண்பர் ‘ பரவால்லே , அதை வினுவுக்கு நான் குடுத்த பரிசா வச்சிகொயேன், எதுக்கு பிள்ளைய அடிக்ரே ? குடு பிரதீப்’ சிறு நம்பிக்கை துளிர்விட்டது எனக்குள்,அதுவும் அப்பாவால் ஆசிட் ஊற்றி அழிக்கப்பட்டது.’ இல்லை இல்லை இது மாறி நிறைய வச்சிருக்கான், பரவால்லே , நாங்க வர்றோம் ‘ என்றவாரே என்னை இழுத்துக் கொண்டு போய் ஆட்டோவில் ஏற்றினார். இதுவரை புரியாத இழப்பு… இப்போது புரிய எனது வெறும் கையும் , அங்கே பிரதீப்பிடம் உள்ள பாக்சையும் பார்க்கும்போது …கண்களில் நீர் தளும்ப அப்பாவை பார்த்தபோது ,

அவர் அம்மாவிடம் ஏதோ சிரித்து பேசிக்கொண்டிருந்தார்…

‘ அப்பா …பா ஏன் பா அழுகிறீங்க?’ அஞ்சுவின் குரல் கேட்டு திடுக்கிட்டு நிமிர்ந்து உட்கார்ந்தேன்.

அஞ்சுவின் கேள்வி புரிந்ததும் கண்களை தொட்டு அதில் ஈரம் படியக் கண்டு நானே ஆச்சர்யப்பட்டு

‘ஒண்ணுமில்லை அஞ்சு குட்டி… கண்ணுல தூசி’ சமாளித்தேன்.

மெதுவாய், ‘சரி வா ‘ என்று அஞ்சுவின் கைப்பற்றி கடைக்கு சென்றேன். அங்கு அஞ்சு ஏதேதோ பேனா வகையில் மூழ்கி இருந்தாள். கடையே தலைகீழாய் புரட்டி கடைசியில் ஒரு பேனா எடுத்து என்னிடம் ‘அப்பா இதுதான் பா ‘ என்றவளின் முகத்தில் வாழ்வின் அனைத்து இன்பத்தையும் அடைந்த சந்தோஷம். பணத்தை குடுத்து முடித்து , பேனாவை கையில் வங்கிப் பார்த்தேன், பின் அஞ்சுவின் முகம் பார்த்து சிரித்து அதை குடுத்தேன்.

இருவரும் மகிழ்ச்சியாய் வீட்டிற்குள் நுழைந்தோம். மீரா இதற்காகவே காத்திருந்தது போல் ‘ என்ன அப்பாவும் பொண்ணும் நினைச்சத சாதிச்டீங்களா’ என்று ஆரம்பிக்க நான் அஞ்சுவின் கையை இறுக்கமாக பற்றி அதில் என் உதடுகளைப் பதித்தேன். 30 வருட ஏக்கம் தீர்ந்த வலுவான மகிழ்ச்சியான முத்தம் அது.